முகப்பு
திருச்சி

எலக்ட்ரீசியனை தாக்கிய 8 பேர் மீது வழக்கு

த. பாதர்பேட்டையில் எலக்ட்ரீசியனை தாக்கிய 8 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

த. பாதர்பேட்டையில் எலக்ட்ரீசியனை தாக்கிய 8 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 
துறையூர் வட்டம் த. பாதர்பேட்டை வடக்கு காட்டுக் கொட்டகையைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் காளிதாஸ் (44), எலக்ட்ரீஷியன். இவர் ஏப். 27-ல் பழனியப்பனுக்கு சொந்தமான சில்லி சிக்கன் கடையில் இருந்தார்.
த. முருங்கப்பட்டி வெடிமருந்தாலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் முதல் நாளின் போது மற்ற போராட்டக்காரர்களுடன் சேர்ந்து கடைக்காரர் பழனியப்பன் த. பாதர்பேட்டை முத்துக்குமாரை  என்பவரை வெடிமருந்தாலைக்கு வேலைக்குச் செல்ல விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினாராம். 
இதனால் கோபமுற்ற முத்துக்குமார், அவருடைய தந்தை பெருமாள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பழனியப்பனிடம் தகராறு செய்தனர். அப்போது பழனியப்பனுக்கு ஆதரவாகப் பேசிய காளிதாஸை முத்துக்குமார் தரப்பினர் தாக்கினர். இதில் காயமடைந்த காளிதாஸ் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸார் துறையூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காளிதாஸை விசாரித்த பின்னர் முத்துக்குமார், அவருடைய தந்தை பெருமாள் உள்பட 8 பேர் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →