முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் காவிரியாற்றில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் அம்மாமண்டப காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை சித்ரா பௌர்ணமியையொட்டி நம்பெருமாள் எழுந்தருளி யானைக்கு

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

ஸ்ரீரங்கம் அம்மாமண்டப காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை சித்ரா பௌர்ணமியையொட்டி நம்பெருமாள் எழுந்தருளி யானைக்கு (கஜேந்திரன்) விமோசனம் அளிக்கும் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 7.30-க்கு புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி அம்மா மண்டப ஆஸ்தான மண்டபத்தை 10.30-க்கு அடைந்தார். பின்னர் பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 6 மணிக்கு புறப்பட்டு காவிரியாற்றிற்குள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 
அப்போது யானை ஆண்டாள் (கஜேந்திரன்) நம்பெருமாளை நோக்கி 3 முறை பிளிறியது. பின்னர் நம்பெருமாள் அருகில் வந்து யானைக்கு சந்தனம், சடாரி வைத்து அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசித்தனர். அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு 6.45-க்கு திருவூரல் ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். இரவு 8.15-க்கு புறப்பட்டு 9.15-க்கு மூலஸ்தானத்தை அடைந்தார் நம்பெருமாள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →