முகப்பு
திருச்சி

கட்டுரைப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு

கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஏ.கே. செங்கோட்டையன் பரிசு வழங்கினார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஏ.கே. செங்கோட்டையன் பரிசு வழங்கினார்.
பொது நூலகத் துறை சார்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இதில்,  லால்குடி வட்ட அளவில் முதலிடம் பிடித்த ஆர்.சி. தூய சவேரியார் நடுநிலைப் பள்ளி மாணவர் சு. வெற்றிவேல், 2-ஆம் இடம்பெற்ற  டால்மியா மேல்நிலைப் பள்ளி மாணவி மு. வர்ஷினிக்கும்,  மாவட்ட அளவில்  மூன்றாமிடம் பிடித்த துறையூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி மோ. கீர்த்தனா, இரண்டாமிடம் பிடித்த  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ப.சிவரஞ்சனி,  9 - 12 வகுப்பு பயிலுவோர் பிரிவில் துறையூர் வட்ட அளவில் முதலிடம் பிடித்த செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி மாணவி ரா. திவ்யதர்ஷினி,  இரண்டாமிடம் பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கு. நிறைமதி ஆகியோருக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற விழாவில் கேடயமும், சான்றிதழும் வழங்கினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →