முகப்பு
திருச்சி

குமரன்நகர் பகுதியில் மெகா தூய்மைப்பணி

திருச்சி  மாநகராட்சி சார்பில் குமரன் நகர் பகுதியில் மெகா தூய்மைப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

திருச்சி  மாநகராட்சி சார்பில் குமரன் நகர் பகுதியில் மெகா தூய்மைப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கடந்த 22 ஆம் தேதி திருச்சி காவிரிக் கரையில் திருச்சி பிளாக்கிங் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற வார்டுகளிலும் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில்  திருச்சி மாநகராட்சியின் 52-ஆவது வார்டிலுள்ள குமரன் நகரில் மெகா தூய்மைப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பணியை மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தார்.  மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுடன்  அப்பகுதி குடியிருப்பு சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இப்பணியை மேற்கொண்டனர்.  காலிமனைகள் மற்றும் சாலைகளில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியை அவர்கள் மேற்கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →