துவரங்குறிச்சி அருகே சொகுசு பேருந்து கவிழ்ந்து 25 பேர் காயம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து 25 பேர் காயமடைந்தனர்.
திருச்சிதுவரங்குறிச்சி அருகே சொகுசு பேருந்து கவிழ்ந்து 25 பேர் காயம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து 25 பேர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து 25 பேர் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு சுமார் 45 பயணிகளுடன் சனிக்கிழமை இரவு புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தபோது திடீரெனக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த ராபர்ட் (31), கிருஷ்ணன் (64), கபில் (23), புதுமை (60), மாரியப்பன், ராஜ்குமார், வள்ளியம்மாள், பிரித்தி, லெட்சுமி, செல்வராஜ், மாணிக்கவாசகம், சண்முகராஜ், அஜீத், மணிகண்டன் மற்றும் ஓட்டுநர் நயினார், 15 பெண்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை காவல் ரோந்து போலீஸார் மற்றும் நெடுஞ்சாலை மீட்புக் குழுவினர் காயமடைந்தோரை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு முதலுதவிக்குப் பின் அனைவரும் திருச்சி, மணப்பாறை மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். விபத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து ஓட்டுநர் தென்காசியை சேர்ந்த நயினாரை (48) கைது செய்து விசாரிக்கின்றனர்.