திருச்சி

குட்கா வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் வழக்குரைஞரிடம் சி.பி.ஐ. விசாரணை

DIN

குட்கா வழக்குத் தொடர்பாக தஞ்சாவூரில் வழக்குரைஞரிடம் சிபிஐ அலுவலர்கள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர் மாதாகோட்டை சாலை ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் வேலு கார்த்திகேயன். வழக்குரைஞரான இவர் தற்போது அமமுகவில் உள்ளார்.
இவரது வீட்டுக்கு திங்கள்கிழமை வந்த சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இதில், குட்கா வழக்குத் தொடர்பாக 2016 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரனுக்கு யார் கூறி ஜாமீன் வாங்கிக் கொடுத்தீர்கள் என சிபிஐ அலுவலர்கள் விசாரித்தனராம். சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் கூறியதன் அடிப்படையில் வாங்கிக் கொடுத்தேன் என வேலு கார்த்திகேயன் கூறினாராம். இதையடுத்து, சிபிஐ அலுவலர்கள் விசாரணையை முடித்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT