திருச்சி

மணப்பாறை அருகே மஹா சிவராத்திரி திருவிழா

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த காவல்காரன்பட்டி மலையாண்டி சுவாமி கோயிலில் மஹா சிவராத்திரி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு மலையாண்டிசாமி, கருப்புசாமி மற்றும் நொண்டி முனி ஆகிய தெய்வங்களுக்கு படையல் வைக்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து புதன்கிழமை காலை முதல் தெய்வங்களுக்கு பூ பழம் வழிபாடும் நடைபெற்றது. இதில் காயாமலையை சுற்றி 18 பட்டிகளைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நெல், குதிரை சிலை போன்றவற்றை நேர்த்திக் கடனாக செலுத்தியும் வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை ஆலய பரம்பரை அறங்காவலர் முத்துவீரலக்கையா கவுண்டர் மற்றும் ஊர் முக்கியஸ்தர் கே.எம். வரதராஜன் உள்ளிட்டோர் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி தலைமையில் புத்தாநத்தம் போலீஸார் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT