திருச்சி

சூரியூரில் ஜல்லிக்கட்டு: 20 பேர் காயம்

DIN

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் பொங்கல் பண்டிகையையொட்டி  ஜல்லிக்கட்டு  திங்கள்கிழமை நடைபெற்றது.  இதில்,  447  காளைகளும், 439 வீரர்களும் பங்கேற்றனர்.  சுமார் 20 பேர் லேசான காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மக்களவை உறுப்பினர் ப. குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.எஸ். கல்யாண்,  வட்டாட்சியர்கள் ஷோபா, ரெங்கராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில்,  திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் மொத்தம் 450 காளைகள் பங்கேற்றன. அவற்றிற்கு கால்நடை மருத்துவக்குழுவினர் மேற்கொண்ட பரிசோதனையில் 3 காளைகள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. 
 அதேபோல மாடுபிடி வீரர்கள் 461 பேர் சீருடையுடன் களத்திற்கு வந்தனர். அவர்களையும் மருத்துவக் குழுவினர் பரிசோதித்ததில் 22 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 439 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். போட்டிகள் கலை 9.30 மணிக்குத் தொடங்கி பகல்2  மணிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் காளைகள் அதிகம் என்பதால், மாலை 4.30 மணி வரையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கால்நடை பராமரிப்புத் துறையினர், சுகாதாரத்துறையினர், தீயணைப்புத்துறையினர், வருவாய் துறை அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் முகாமிட்டிருந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 5 ஆம்புலன்சுகளும், தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. 1 மணி நேரத்துக்கு ஒரு பகுதியாக மாடுகள் தலா 150 வீதம் கட்டவிழ்த்து விடப்பட்டன. நிகழ்ச்சியை சுமார் ஆயிரித்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். சுமார் 20 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.  உடனடியாக அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT