முகப்பு
திருச்சி

ஒரே தேர்தலுக்கு வாய்ப்பில்லை

ஒரே நேரத்தில் சட்டப்பேரவை , மக்களவைத் தேர்தலுக்கு வாய்ப்பில்லை என்றார் எம்.ஜி.ஆர். அம்மா-தீபா பேரவை பொதுச் செயலர் ஜெ. தீபா.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:18 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ஒரே நேரத்தில் சட்டப்பேரவை , மக்களவைத் தேர்தலுக்கு வாய்ப்பில்லை என்றார் எம்.ஜி.ஆர். அம்மா-தீபா பேரவை பொதுச் செயலர் ஜெ. தீபா.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்த அவர் அளித்த பேட்டி ;
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடக்கி ஆளப்படுகிறது, மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.  ஜனநாயக நாட்டில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல் நடத்த  சாத்தியமில்லை, அப்படி நடந்தால் ஜனநாயக ஆட்சி நடத்த முடியாது. 
எட்டு வழி சாலைத் திட்டம் என்பது தேவையற்றது.  அத்திட்டத்தால் விவசாயிகள் எந்தளவுக்கு பாதிக்கப்படுவர் என்பதை அறிய உண்மையான கள ஆய்வு  செய்ய வேண்டும்.  அத்திட்டம்  குறித்து பேசினாலே கைது செய்கிறார்கள்.  ஒட்டுமொத்த தமிழக மக்களும் விரும்பாத இத் திட்டம் தேவையற்றது. 
தேர்தல் நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்கப்படும். அரசியல் ரீதியாக என்னை ஏமாற்றி விட்டு என்னிடமிருந்த தொண்டர்கள் சிலரை ஒ.பி.எஸ். தன் பக்கம் இழுத்து கொண்டார். 
இதனால் அவர் செல்வாக்கு உயர்ந்துள்ளது. ஐந்தாண்டுகள் இந்த அரசு நீடிக்குமானால் தமிழகத்தில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும். எல்லா ஊழல்களிலும் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது.
உடனடியாக இதுகுறித்து காலம் தாழ்த்தாமல்  சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவைற்றது. மருத்துவத் துறையில் மேல் மட்டத்திலிருந்த தமிழகம் நீட் தேர்வால் சரிந்துவிட்டது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.