முகப்பு
திருச்சி

ரூ.11 லட்சம் கடத்தல்  தங்கம் பறிமுதல்

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட  ரூ. 11 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை திருச்சி சுங்கத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:15 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட  ரூ. 11 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை திருச்சி சுங்கத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத் துறையினர் நவீன் ஸ்கேனர் மூலம் சோதனை செய்தபோது சென்னையைச் சேர்ந்த முகமது நஜிமுதீன் (24) என்பவர் கொண்டு வந்திருந்த மின்னணு சாதனத்தில் காயிலுக்குப் பதிலாக  4 தங்க கட்டிகளை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. ரூ. 11. 02 லட்சம் மதிப்புள்ள  400 கிராம் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.