முகப்பு
திருச்சி

தீவிர வரி வசூல் முகாம்: ஆணையர் வேண்டுகோள்

திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களை வசூல் செய்வதற்கு தீவிர வரிவசூல் முகாம் நடைபெறுகிறது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களை வசூல் செய்வதற்கு தீவிர வரிவசூல் முகாம் நடைபெறுகிறது.
இது குறுத்தி மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை  பொன்மலை, கோ-அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் கோட்ட அலுவலகங்களில், மார்ச் 1 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் தீவிர வரி வசூல் முகாமில் செலுத்தலாம். 
இதில் அனைத்து வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களும் தங்களது வரி மற்றும் வரியில்லா இனம் தொடர்பான தொகையை செலுத்திக்கொள்ளலாம். 
இது தவிர   ‌h‌t‌t‌p‌s://‌t‌n‌u‌r​b​a‌n‌e‌p​a‌y.‌t‌n.‌g‌o‌v.‌i‌n   என்ற வலை தளத்தில் இணையதளம் மூலமும் வரியினங்களை செலுத்த முடியும்.  
பொதுமக்கள் உரிய வரியினங்களை முறையாக செலுத்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →