முகப்பு
திருச்சி

வரன் பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை

திருச்சியில் இளம்பெண் ஒருவர் திருமணத்துக்கு பார்த்த வரன் பிடிக்காததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Updated On : 29 மார்ச், 2018 at 7:05 AM
பகிர்:

திருச்சியில் இளம்பெண் ஒருவர் திருமணத்துக்கு பார்த்த வரன் பிடிக்காததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி கே.கே. நகர் சாலை சிம்கோ மீட்டர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ராமு மகள் வசுமதி (28). சென்னையில் பொறியாளராக பணியாற்றி வந்தார். நீண்ட காலமாக மணமகன் தேடியும் அவருக்கு சரியான வரன் அமையவில்லை எனக் கூறப்படுகிறது. 
இந்நிலையில் கடந்த இருதினங்களுக்கு விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த அவரிடம் வரன் பார்த்த விவரத்தை பெற்றோர் கூறியுள்ளனர்.  மணமகன் மற்றும் அவரது பணி உள்ளிட்டவை வசுமதிக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 
இதனால் விரக்தியில் இருந்த அவர் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 
தகவலின் பேரில் எ.புதூர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், வசுமதி,  தனக்கு சரியான வரன் அமையாததால் தற்கொலை செய்துகொள்வதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை எனவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. 
இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.