சாலை மறியல்: 15 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் அந்த அமைப்பினர் மாநகர செயலாளர் முருகேசன் தலைமையில், மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் கண்டன முழக்கம் எழுப்பினர். பின்னர், நகரப் பேருந்துகள் இயக்கப்படும் பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.