முகப்பு
திருச்சி

உய்யக்கொண்டான் வாய்க்காலைத் தூர்வாரக் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்காலைத் தூர்வாரக் கோரி வாய்க்காலுக்குள் அமர்ந்து போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர்

Updated On : 22 மே, 2018 at 2:56 AM
பகிர்:

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்காலைத் தூர்வாரக் கோரி வாய்க்காலுக்குள் அமர்ந்து போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.ப.சின்னத்துரை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின் போது, சோமரசம்பேட்டை பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்காலைத் தூர்வார வேண்டும் என ம.ப.சின்னத்துரை மனு அளித்திருந்தார். ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், எவ்வித நடவடிக்கையும் வாய்க்காலில் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நடவடிக்கையைக் கண்டித்து திங்கள்கிழமை அதிகாலை சோமரசம்பேட்டை பகுதியில் குப்பைகள் நிறைந்த காணப்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்காலுக்குள் தனி ஆளாக ம.ப.சின்னத்துரை சென்று போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினார்.
தகவலறிந்து சென்ற சோமரசம்பேட்டை போலீஸார் சின்னத்துரையை கைது செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அதன்பின்னர், துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் காவல் நிலையத்துக்குச் சென்று சின்னத்துரையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை அழைத்துச் சென்ற சின்னத்துரை, கொடியாலம் பகுதி வரை உய்யக்கொண்டான் வாய்க்காலின் நிலையை நேரில் காண்பித்தார். வாய்க்காலை சீரமைத்துத் தந்தால்தான், பாசனப்பகுதிகளுக்கு நீர் செல்ல முடியும் என்றார்.
மேலும், சின்னத்துரையின் போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த பொதுப்பணித் துறைச் செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.