திருச்சி மாவட்ட மைய நூலகத்தில்பேச்சுக்கலைப் பயிற்சி
கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுக்கலை பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுக்கலை பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
கோடைகாலத்தை மாணவ, மாணவிகள் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டுமெனில் மாவட்ட மைய நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஓரிகாமி-காகிதகலைப் பயிற்சி, கண்காட்சி, சதுரங்கப் போட்டிக்கான பயிற்சி, நீங்களும் சாதனையாளர்களாக ஆகலாம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வாசகர் வட்டம் மற்றும் மாவட்ட நூலகத் துறை சார்பில் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு நிகழ்வாக, திங்கள்கிழமை மாணவ, மாணவிகளுக்கான பேச்சுக்கலைப் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவகுமார் தொடக்கி வைத்தார். ஜெ.சி.ஐ. திருச்சி ராக்டவுனை சேர்ந்த சந்தோஷ், விஜய் மித்ரா, வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் கோவிந்தசாமி ஆகியோர் அளித்தனர். இந்த பயிற்சி வகுப்பில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.