முகப்பு
திருச்சி

மணப்பாறையில் இந்திய கம்யூ. பொதுக்கூட்டம்

மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர, ஒன்றியம் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியார் சிலை திடலில் நடைபெற்றது.

Updated On : 22 மே, 2018 at 2:29 AM
பகிர்:

மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர, ஒன்றியம் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியார் சிலை திடலில் நடைபெற்றது.
கட்சியின் புறநகர் மாவட்டச் செயலர் த. இந்திரஜித் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகர செயலர் ஜனசக்தி உசேன், வையம்பட்டி ஒன்றிய செயலர் ஏ.டி. சண்முகானந்தம், மருங்காபுரி ஒன்றியச் செயலர் சி. வெள்ளைக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் தேசிய செயல து. ராஜா பேசுகையில், பாஜக கட்சி மக்கள் தீர்ப்பை தங்களுக்குச் சாதகமாக புரட்டி போட விரும்புகிறார்கள். இதற்கு அவர்கள் பயன்படுத்தும் கருவியாக மாநில ஆளுநர்கள் செயல்படுகிறார்கள் என்றார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ். செல்வராஜ், விவசாய சங்க மாவட்ட செயலர் அயிலை சிவசூரியன், மாவட்டக் குழு ப. தட்சணாமூர்த்தி, வி.ச. மாவட்ட பொருளாளர் ஆர். பழனிசாமி ஆகியோர் பேசினர்.
ஒன்றிய செயலாளர் சி. தங்கராஜ் வரவேற்றார். நகர துணை செயலர் பி.சின்னதுரை நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.