சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் !
சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சுவாமி சித்திரைத் தேரோட்டம் குறித்து...
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சுவாமி சித்திரைத் தேர்த்திருவிழாவினையொட்டி திருத்தேர் வடம் பிடத்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
சங்ககிரி மலைமீதுள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் ஏப். 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் சுவாமி மலையிலிருந்து நகருக்கு எழுந்தருளினார். அதையடுத்து, நாள்தோறும் உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு மலையடிவாரத்தில் உள்ள தங்கும் மண்டபத்தில் பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. உற்வசமூா்த்தி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தாா்.
இதனையடுத்து 9 ஆவது நாள் வியாழக்கிழமை காலை அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளினர்.
Advertisement
Advertisement
தேரில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து வழிப்பட்டனர். மாலையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருளிய சப்பாரத்தினை முன்னதாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அதனையடுத்து அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் எழுந்தருளிய பெரிய தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரினை சங்ககிரி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமிகளை குடும்பத்துடன் வழிப்பட்டுச் சென்றனர்.
பல்வேறு கட்டளைகளுக்கு பிறகு சுவாமிக்கு மே.10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஊஞ்சல் உற்சவமும், மே.11 ஆம் தேதி திங்கள்கிழமை காலை சுவாமி திருமலைக்கு எழுந்தருளுகிறார் அன்றைய நாள் மலை மீது வன்னிய குல சத்திரியர்கள் அமைப்பின் சார்பில் மாலையில் குறிச்சி அலங்காரம் பல்வேறு வாண வேடிக்கைகளும் நடைபெற உள்ளன.
Sangakiri Arulmigu Chennakesava Perumal Temple Chithirai Therottam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.