முகப்பு
திருச்சி

ரயிலில் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது

ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு தந்த கோவில்பட்டி இளைஞரை ரயில்வே போலீஸார் திங்கள் கிழமை கைது செய்தனர்.

Updated On : 22 மே, 2018 at 2:32 AM
பகிர்:

ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு தந்த கோவில்பட்டி இளைஞரை ரயில்வே போலீஸார் திங்கள் கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( 28). ஐடிஐ. படித்துள்ள இவர், குவைத்தில் பணியாற்றி வருகிறார். அண்மையில் சொந்த ஊருக்கு வந்த இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு, சுவிதா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு பயணம் செய்தார். இந்த ரயில் திண்டுக்கல்- திருச்சி இடையே வந்தபோது பக்கத்து சீட்டில் படுத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சக பயணிகள் அவரை கண்டித்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் விருத்தாசலம் ரயில்வே போலீஸில் புகார் செய்ததை அடுத்து ரயில்வே போலீஸார் கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.