திருச்சி

மதுக்கடையை அகற்றக்கோரி  ஆட்சியரிடம் மனு

DIN

திருச்சி அருகே புங்கனூர் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி தமாகா நிர்வாகி தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
புங்கனூர் பகுதியில் புதிதாக மதுக்கடையைத் திறந்துள்ளது டாஸ்மாக் நிறுவனம். அந்த மதுக்கடையை திறக்கக் கூடாது என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், த.மா.கா. விவசாயப் பிரிவு நிர்வாகி புங்கனூர் செல்வம் தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அப்பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம், பள்ளி ஆகியவை அமைந்துள்ளதால் மதுக்கடையைத் திறக்க அனுமதிக்கக் கூடாது எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கணவரை சேர்த்து வைக்கக் கோரிக்கை: திருச்சி கீழ அம்பிகாபுரம் முனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ் மனைவி பர்வீன்பானு (29) என்பவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தனது கணவர் அப்பாஸ், வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திவருவதாகவும், கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.  அவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மனு குறித்து விசாரிக்க ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT