திருச்சி

வையம்பட்டியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

DIN

வையம்பட்டியில் நடைபெற்ற மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க வையம்பட்டி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமை மாவட்ட உதவி திட்ட அலுவலர் முத்துசெல்வன் துவக்கி வைத்தார். இயற்முறை மருத்துவர் ரமேஷ், வட்டாரக் கல்வி அலுவலர்கள் அந்தோணிசாமி, ஜோசப் ஆண்டனி ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சாந்தி முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் மைதிலி, வில்லியம் ஆன்ட்ருஸ், கீதா, விக்னேஷ் ஆகியோர் பரிசோதனை செய்தனர்.
இதில் 107 பேருக்கு மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT