திருச்சி

மாநகரின் சில பகுதிகளில் இன்றும்,  நாளையும் குடிநீர் விநியோக ரத்து

DIN

பராமரிப்பு பணியால் மாநகரில் சில பகுதிகளில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (நவ.12,13) குடிநீர் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவன் ஆசிரமம் பகுதியில் உள்ள தரைநிலை நீர்தேக்கத் தொட்டியின் பிரதான நீர் உந்துக் குழாயில்  திருவானைக்கா அமுதா பெட்ரோல் பங்க் அருகில் நீர்கசிவு ஏற்பட்டு, அதிக நீர் வெளியேறிவருகிறது. இதைச் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், மலைக்கோயில், நேருஜி நகர், அரியமங்கலம், உக்கடை, அரியமங்கலம் கிராமம்,  ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில் நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்த நகர், ஜெ.கே.நகர், மேலக்கல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்பிரமணியபுரம், விமான நிலையம் பகுதி, காமராஜர் நகர், செம்பட்டு, காஜாமலை , காஜாமலைநகர், கே.கே.நகர், தென்றல் நகர், ஆனந்த் நகர், சத்தியவாணிமுத்து நகர்,  ஐயப்ப நகர், எடமலைப்பட்டிபுதூர், கே.சாத்தனூர், அன்புநகர், கிருஷ்ணமூர்த்தி நகர், கிராப்பட்டி பகுதிகளில்  திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. 
எனவே மக்கள் குடிநீரைச் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT