திருச்சி

மாநகர், புறநகர்ப் பகுதிகளில் நவ.17 இல் மின்தடை

DIN

திருச்சி 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் உள்ள மின் சாதனங்களில் அவசரக் காலப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நவம்பர் 17 ( சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின்  தென்னூர் நகரியச் செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி 110 கி.வோ.துணை மின் நிலையத்தில் உள்ள மின் சாதனங்களில் அவசரக் கால பராமரிப்புப் பணிகள் நவம்பர் 17 ஆம் தேதி மேற்கொள்ளப்படஉள்ளன.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மத்தியப் பேருந்து நிலையம், ஜங்சன் பகுதிகள், வில்லியம்ஸ் சாலை, ராயல் சாலை, பிராமினேட் சாலை, மாவட்ட ஆட்சியரகச் சாலைப் பகுதிகள், வார்னர்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, ரெனால்ட்ஸ் சாலை, கண்டோன்மென்ட் பகுதிகள், மேலப்புதூர், புதுக்கோட்டைசாலை மேம்பாலப் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, கான்வென்ட் சாலை, தலைமை அஞ்சல் நிலையப் பகுதி, குட்ஷெட் சாலை, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி,  உறையூர் ஒரு பகுதி, மேட்டுத்தெரு, வாலாஜா பஜார், வயலூர் சாலை, வண்ணாரப்பேட்டை, குமரன் நகர், உறையூர் வெக்காளியம்மன்  பாத்திமாநகர், குழுமணி சாலை, நாச்சியார்கோயில் முதல் சீராத்தோப்பு வரை இருபுறமும்,  பொன்னகர்,  கிராப்பட்டி  அரசு காலனி, ராஜீவ்காந்தி நகர், தீரன் நகர், பிராட்டியூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை, பள்ளக்காடு, வயலூர், வியாழன்மேடு, புலியூர், எட்டரைப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT