திருச்சி

காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து மறியல்

DIN

மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரை அத்துமீறி மருத்துவனைக்குள் நுழைந்து விசாரணைக்கு அழைத்துச் சென்ற உதவி ஆய்வாளரைக் கண்டித்து, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
மணப்பாறை அடுத்த பின்னத்தூரில் கோயில் முறை தொடர்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த நல்லபெருமாள் - ரெங்கராஜ் குடும்பத்தினரிடையே  ஏற்பட்ட மோதலில் ரெங்கராஜ் குடும்பத்தினர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்லபெருமாள் குடும்பத்தைச் சேர்ந்த வடிவேல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக புத்தாநத்தம் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், அத்துமீறி தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்து வடிவேலை அழைத்துச் சென்றதாகக் கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மணப்பாறை காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT