திருச்சி

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் :  உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

DIN

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் திங்கள்கிழமை இரவு  பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 
திருச்சி துவாக்குடி பகுதியில் வாகனத் தணிக்கை செய்யும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், லாரி ஒட்டுநர்களிடம் லஞ்சம் பெறுவதாக புகார்கள் வந்தன.
இந்நிலையில்  ஓட்டுநர் ஒருவரின்  உரிமத்தை காவலர் ஒருவர் வாங்கி வைத்துக் கொண்டு, ரூ.1000 லஞ்சம் தந்தால் மட்டுமே உரிமம் திருப்பித் தரப்படும்  என மிரட்டல் விடுப்பதும், பின்னர் ஓட்டுநர் பணம் கொடுத்துவிட்டு உரிமத்தை பெற்றுச் செல்வதுமான விடியோ காட்சி திங்கள்கிழமை வெளியானது. இதையடுத்து மாவட்டக் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் போக்குவரத்து உதவி ஆய்வாளர்  சீராளன் என்பது தெரியவந்தது. இதையடுத்து திங்கள்கிழமை இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக்  உத்தரவின்பேரில் மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றப்பட்ட சீராளன்,  பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT