திருச்சி

நடமாடும் காசநோய் பரிசோதனை முகாம் தொடக்கம்

DIN

திருச்சி மாவட்டத்தில் நடமாடும் காசநோய் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
இதற்காக மாவட்டம் முழுவதும் செல்வதற்காக இரண்டு பிரத்யேக வாகனங்களில் நடமாடும் காசநோய் கண்டறியும் ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை வழியனுப்பும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. வாகனங்களை வழியனுப்பி வைத்து ஆட்சியர் சு. சிவராசு கூறியது: திருச்சி மாவட்டத்தில் காசநோய் தொடர்பாக நடமாடும் வாகன பரிசோதனை முகாம் ஏப்.29ஆம் தேதி தொடங்கி மே 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நடமாடும் வாகனத்தில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், முதல்நிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் உடனிருந்து பரிசோதனை மேற்கொள்வர். பொதுமக்கள் இந்த வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர். முதல்நாளான திங்கள்கிழமை திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட எம்ஜிஆர் நகர், வண்ணாரப்பேட்டை, தாராநல்லூர், இ.பி. சாலை, ஜெயில்பேட்டை, கூனிபஜார், பொன்மலைப்பட்டி ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பரிசோதனை செய்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT