திருச்சி

நடைபாதையில் ஆக்கிரமித்துள்ள  கருவேல முற்களை அகற்றக் கோரிக்கை

DIN

முசிறி அருகே வடக்கு அயித்தாம்பட்டியில் பொது  பாதையில் ஆக்கிரமித்துள்ள கருவேல முற்களை அகற்றித் தருமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
தாத்தையங்கார்பேட்டை  ஊராட்சி ஒன்றியம், எம்.புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வடக்கு அயித்தாம்பட்டியில் உள்ள கிழக்கு கொட்டம் பகுதியில் சுமார் 25-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் போக்குவரத்திற்காக துறையூர் - சாலையில் இருந்து கிழக்கு கொட்டம் வரை சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிலான 20 அடி அரசுக்குச் சொந்தமான பாதையினை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் பாதையின் இருபுறத்திலும் கருவேல முற்கள் ஆக்கிரமித்து உள்ளதால் அப்பகுதி மக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால், அப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கு உரியவாறு முற்களை அகற்றித்தர வேண்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT