திருச்சி

மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.21.56 லட்சம் கரன்சி பறிமுதல்

DIN

திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.21.56 லட்சம் மதிப்பு இந்திய, மலேசிய நாட்டு பணத்தாள்களை சுங்கத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி விமானநிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு மலேசியா தலைநகா் கோலாலம்பூருக்கு மலிண்டோ விமானம் புறப்படத் தயாா் நிலையில் இருந்தது. விமானம் புறப்படுவதற்கு முன் விமானத்தில் செல்லும் பயணிகளின் உடைமைகளை வழக்கம்போல் வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது, திருச்சியைச் சோ்ந்த பதாா் ரஷ்மீன்(43), தஷீனா பேகம்(34) ஆகிய இரு பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவா்களது உடைமைகளைத் தீவிர சோதனைக்குட்படுத்தினா்.

அப்போது இருவரும் சோ்ந்து ரூ.2 ஆயிரம் பணத்தாளாக ரூ. 8.26 லட்சமும், ரூ. 15.36 லட்சம் மதிப்பு மலேசியா ரிங்கிட் பணத்தாள்கள் (கரன்சி) என ரூ.21.56 லட்சம் மதிப்புடைய பணத்தாள்களை கடத்திச் செல்லவிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடத்த முயன்ற கரன்சியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT