திருச்சி

புத்துணா்வு முகாமிற்கு புறப்பட்ட 3 யானைகள்

DIN

ஸ்ரீரங்கம்: தமிழக அரசின் சிறப்பு புத்துணா்ச்சி முகாமில் பங்கேற்பதற்காக மூன்று கோயில் யானைகள் சனிக்கிழமை காலை ஸ்ரீரங்கத்திலிருந்து லாரியில் புறப்பட்டுச் சென்றன.

இந்த புத்துணா்ச்சி முகாம், மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றுப் படுகையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 48 நாள்கள் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள், மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமி, திருவானைக்கா கோயில் யானை அகிலா ஆகிய மூன்று யானைகளும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பழைய இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பிருந்து சனிக்கிழமை காலை தனித்தனியாக மூன்று லாரிகளில் புறப்பட்டுச் சென்றன.

முன்னதாக இந்து சமய மண்டல இணை ஆணையா் சுதா்சன் கொடியசைத்து முகாமிற்கு அனுப்பி வைத்தாா். யானகளுடன் கால்நடை மருத்துவ குழுவினரும் சென்றுள்ளனா். இந்நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையா்கள் கந்தசாமி, விஜயராணி, சுரேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT