திருச்சி

முறையாக படித்த வழக்குரைஞரா?  விசாரிக்க குழு அமைப்பு

DIN

சட்டக்கல்லூரிக்கு சென்றதாகக் கூறி, தவறான முறையில் தேர்வெழுதி வழக்குரைஞர்களாகப் பணியாற்றி வருபவர்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக திருச்சி வழக்குரைஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இச்சங்கத்தின் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
சட்டப்படிப்புக்காக முறையாக கல்லூரிக்குச் செல்லாமல், மாற்றுப் பணியில் இருந்து கொண்டே சட்டக் 
கல்லூரிக்குச் சென்றதாகக் கூறி தேர்வெழுதி படித்து வழக்குரைஞர்களாகப் பணியாற்றுவர்கள் குறித்து தகவல் அளிப்பதற்கு வசதியாக பெட்டி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வழக்குரைஞர்களின் கல்வித் தகுதியை வெளிப்படுத்தும் வகையில், சங்கத்தில் உள்ள ஆவணங்களைக் கொண்டு பட்டியல் தயாரிப்பது எனவும், தேவைப் பட்டால் வழக்குரைஞர்களிடம் கல்வித் தகுதியினை கோரிப் பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
முறையாக கல்லூரிக்கு செல்லாமல் சட்டப்படிப்பு படித்தோர் பற்றிய  ஆவணங்களையும் ஆதாரங்களையும் திரட்டுவதற்கு சங்கத்தின் துணைத் தலைவர் எம்.கமாலுதீன் தலைமையில் வழக்குரைஞர் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

SCROLL FOR NEXT