சிஆர்பிஎப் வீரர் குடும்பத்துக்கு மு.க. ஸ்டாலின் உதவி
பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகிலுள்ள கார்குடியைச் சேர்ந்த சிஆர்பிஃஎப் வீரர்
பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகிலுள்ள கார்குடியைச் சேர்ந்த சிஆர்பிஃஎப் வீரர் சிவசந்திரன் குடும்பத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் தெரிவித்து ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவரான தா.பழூர் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் குடும்பத்தினரை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், கார்குடி கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சிவசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவியை சிவசந்திரன் மனைவி காந்திமதியிடம் வழங்கினார்.
முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, ஆ. ராசா, மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா,திமுக மாவட்டச் செயலர் எஸ்.எஸ். சிவசங்கரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.