திருச்சி

கட்டடத் தொழிலாளி சாவில் மர்மம்: உறவினர்கள் புகார்

DIN

திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை மயங்கி விழுந்து இறந்ததில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
கருமண்டபம் விஸ்வாஸ் நகரில் வசித்து வருபவர் பெருமாள் மகன் சௌந்தரபாண்டியன்(60).இவரது மனைவி திலகம்(54). இருவரும் கட்டடத் தொழிலாளிகள். திலகம், எடமலைப்பட்டி புதூரில் உள்ள காவலர் ஒருவரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் அண்மையில் வேலை பார்த்தபோது  தவறி விழுந்து இறந்து விட்டாராம். இது குறித்த விபரத்தை கேட்பதற்காக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்துக்கு சௌந்தரபாண்டியன் சென்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சௌந்தரபாண்டியன் காவல்நிலைய வளாகத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் கூடிய அவரது உறவினர்கள் சௌந்தரபாண்டியன் சாவில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.இதுகுறித்து சௌந்தரபாண்டியனின் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி  புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT