திருச்சி

பச்சமலையில் பழகுநர் உரிமம் வழங்கும் முகாம்

DIN

துறையூர் வட்டம், பச்சமலை டாப் செங்காட்டுப்பட்டி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளியில் பழங்குடியின மக்களுக்கு பழகுநர் உரிமம் வழங்கும் சிறப்பு முகாம் 2 நாள் நடைபெற்றது. 
ஜன.10,11-களில்  நடைபெற்ற முகாமுக்கு ஸ்ரீரங்கம் வட்டார மோட்டார் வாகன அலுவலர் (பொ) பாண்டியன் தலைமை வகித்தார். 
துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வக்குமார் டாப்செங்காட்டுப்பட்டி மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் 138 பேரிடம் விண்ணப்பங்களை பெற்றார். அலுவலக மேற்பார்வையாளர் பிரபாகரன், உதவியாளர் ஜமுனாராணி ஆகியோர் விண்ணப்பங்களை ஆய்வு செய்தனர். 
30 நாள்களுக்கு பிறகு நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு அனைவருக்கும் பழகுநர் உரிமம் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT