திருச்சி

மண்ணச்சநல்லூர் நிதி நிறுவனத்தில் திருட்டு முயற்சி

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் உள்ள தனியார் நிதி மற்றும் நகை அடகு கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருட முயன்றது திங்கள்கிழமை தெரியவந்தது. 
மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் உள்ள கொசமற்றம் பைனான்ஸ் மற்றும் தங்க நகை அடகு கடையை வழக்கம்போல் பணி முடிந்து வெள்ளிக்கிழமை இரவு மேலாளர் பூட்டிச் சென்றார். 
இந்நிலையில், திங்கள்கிழமை காலை வந்து பார்த்தபோது, பக்கவாட்டில் உள்ள ஜன்னலை வளைத்து  உள்ளே புகுந்த மர்மநபர்கள், நகை அடகு கடையின் லாக்கரை உடைக்க 
முயன்றிருப்பது தெரியவந்தது. லாக்கரை உடைக்க முடியாமல் மர்மநபர்கள் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றது தெரியவந்தது. இதனால் லாக்கரில் இருந்த ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ. 35 லட்சம் ரொக்கம் தப்பின. புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் சம்பவ இடத்திற்கு வந்து ஊழியர்களிடம்  விசாரணை நடத்தினார். 
தொடரும் சம்பவம்:  திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் பகுதியில் உள்ள தேசிய வங்கியின் ஜன. 7 ஆம் தேதியும், 18 ஆம் தேதி சமயபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கியிலும்  திட்டு முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT