திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் கல்வெட்டுகளாக வைப்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலைப் பற்றி ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களைப் பாதுகாக்கும் வகையில்,

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலைப் பற்றி ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களைப் பாதுகாக்கும் வகையில், ரூ.20 லட்சத்தில் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளைப் பற்றி 12 ஆழ்வார்களில்  11 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள்அளப்பறியது.  அக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பாசுரங்கள் பின்னர் எழுத்து வடிவமாக்கி அச்சிடப்பட்டது.
பெருமாளைப் பற்றி நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்,  திருப்பாணாழ்வார்,   திருமழிசையாழ்வார்,   பேயாழ்வார்,பூதத்தாழ்வார்,பொய்கையாழ்வார்,பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார்,தொண்டரடிப்பொடியாழ்வார் உள்ளிட்ட 11 ஆழ்வார்கள் பாடிய 247 பாசுரங்கள்  ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் திருக்கொட்டாரம் அருகே நெற்களஞ்சியம் பகுதியில் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த பாசுரங்கள்தான் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் போது அரையர்களால் பாடப்படும்.  நெற்களஞ்சியம் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.  கல்வெட்டுகளை வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட திருக்கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமனுக்கு பக்தர்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT