திருச்சி

எப். கீழையூர் பாப்பாத்தி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

மணப்பாறை அருகிலுள்ள எப். கீழையூர் அருள்மிகு பாப்பாத்தி அம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

மணப்பாறை அருகிலுள்ள எப். கீழையூர் அருள்மிகு பாப்பாத்தி அம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் திருவிழா கடந்த 28 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக,  ஏராளமான பக்தர்கள் திங்கள்கிழமை காலை நவக்குளம் முருகன் கோயில் வளாகத்திலிருந்து  பால்குடம், மாவிளக்கு எடுத்துச் சென்று தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
மாலையில் பொங்கலிடுதல், கிடாவெட்டு நிகழ்வுகள் கோயில் வளாகத்தில் நடைபெற்றன. மேலும் அம்மன் வேடபரி திருவீதியுலா வருதலும் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் திருவிழாவில் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிக்கட்டத்தில் 29 படப்பிடிப்பு!

போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!

விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!

நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!

தில்லி காற்று மாசு: அரசு, தனியார் அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவு!

SCROLL FOR NEXT