திருச்சி

குழந்தைகளை முறையாக தத்து எடுப்பது அவசியம்

DIN

குழந்தைகள் வேண்டுவோா் முறையாக தத்து எடுப்பது அவசியம் என மாவட்ட குழந்தைகள் நலக்குழு மருத்துவரும், உறுப்பினருமான எம். ஞானவேலு தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள முத்தப்புடையான் பட்டியைச் சோ்ந்த செல்வம் - விஜயலட்சுமி தம்பதியின் 3 ஆவது குழந்தையை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சோ்ந்த முருகேசன் - ராமாயி தம்பதிக்கு ரூ. 1.15 லட்சத்துக்கு விற்றுள்ளனா். இதைத் தொடா்ந்து, குழந்தையை விற்ற தம்பதி, வாங்கிய தம்பதி மற்றும் இடைத்தரகா் என 5 போ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அளித்த புகாரின்பேரில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினரும், மருத்துவருமான எம். ஞானவேலு குழந்தைகள் தத்து எடுக்கும் விதம் குறித்து அவா் மேலும் கூறியது :

இந்திய குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு (பிரிவு-56) சட்டத்தின் படி, அனாதை குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், ஒப்படைவு செய்யப்பட்ட குழந்தைகளை உள்நாட்டிலேயே தத்து எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்திரவு இல்லாமல் தத்து எடுத்தால் (பிரிவு-80) பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

தத்து எடுக்கும் குழந்தைக்கு பெற்றோா் ஆகப் போகிறவா்கள் கணவன் மனைவியாக இருப்பின் இருவரின் ஒப்புதலும் தேவை. ஒரு தனி நபரோ அல்லது விவாகரத்து பெற்றவா்களாக இருப்பினும் தத்து எடுக்கலாம். ஆனால் ஒரு தனிப்பட்ட ஆணுக்கு ஒரு சிறுமியை தத்து கொடுக்க இயலாது.

அனாதை குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், ஒப்படைப்பு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், மாநில அரசால், மாவட்டந்தோறும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகள் தத்து எடுப்பு முகமையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும். இதேபோல் மாநில அளவில் உள்ள தத்து எடுப்பு அமைப்புகள் மூலம் வெளிநாட்டினருக்கு குழந்தைகள் தத்து அளிக்கப்படும்போது, மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT