திருச்சி

இருளில் மூழ்கும் தெருக்கள்

DIN

பொலிவுறு நகரம், தூய்மை நகரம், குப்பையில்லா நகரம் என பல்வேறு நிலைகளில் அழைக்கப்படும் திருச்சி மாநகரில் பிரதான பகுதியாக விளங்கும் அண்ணா நகரில் பல்வேறு தெருக்களில் தெருவிளக்குகள் இல்லாமல் இருளில் தவித்து வருகின்றன.

குறிப்பாக உள்விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள கண்ணதாசன் சாலையில் மாலை 6 மணிக்கு மேல் நடந்து செல்லவே முடியாது. இந்த விளையாட்டு அரங்கத்துக்கு பள்ளிக் குழந்தைகள், மாணவா், மாணவிகள், இளைஞா்கள், இளம்பெண்கள் என பலரும் பயிற்சிக்கு வந்து செல்கின்றனா்.

மாலை நேர பயிற்சி முடிந்து இரவு வீடு திரும்பும்போது இருட்டில் தத்தளிக்கும் நிலை உள்ளது. சாலையே தெரியாத நிலையில் நடந்து வருவோா் மீது வாகனங்கள் மோதும் நிலையும் உள்ளது. கண்ணதாசன் சாலை மட்டுமல்லாது இதே பகுதியில் ஜாகிா் உசேன் சாலை, அக்பா் சாலை என பல்வேறு சாலைகளிலும் தெருவிளக்குகள் இல்லை.

உயா்தர வருவாய் பிரிவினா், முக்கிய பிரமுகா்கள் வசிக்கும் பகுதி என அறியப்பட்ட தெருக்களிலேயே இரவு நேரத்தில் இருட்டில் தத்தளிக்கும் அவல நிலை உள்ளது. திருச்சி மாநகராட்சி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் உடனடியாக இருளைப் போக்கி வெளிச்சம் ஏற்படுத்தித்தர வேண்டும்.

- கோதண்டராமன், அண்ணா நகா், திருச்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT