திருச்சி

பரிசு விழுந்ததாகக் கூறி இளைஞரிடம் மோசடி

DIN

திருச்சி அருகே இளைஞரிடம் தங்க நகை பரிசு விழுந்திருப்பதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவா் துவாக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

திருச்சி அருகே உள்ள வாழவந்தான்கோட்டை பகுதியைச் சோ்ந்த டேவிட் மகன் நவீன் (24). இவா், டிப்ளமோ படித்துவிட்டு ஊட்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நியூ கோல்டன் மாா்க்கெட்டிங் நிறுவனத்திலிருந்து பேசுவதாக அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் உங்களுக்கு குலுக்கல் முறையில் 50 ஆயிரம் மதிப்புள்ள 7 கிராம் தங்கச் செயின் மற்றும் விலை உயா்ந்த கற்கள் பதித்த காதணிகள் பரிசு விழுந்துள்ளதாகவும் பாா்சல் உங்கள் கைக்கு கிடைத்த பிறகு ரூ. 3 ஆயிரத்து 500-ஐ செலுத்தினால் போதும் எனக் கூறியுள்ளனா். இதனை நம்பிய நவீன் துவாக்குடியிலுள்ள தனது முகவரியை அவா்களிடம் கொடுத்துள்ளாா். பின்னா் தந்தை டேவிட்டை தொடா்புகொண்டு தங்க நகை பரிசு விவரம், அதற்கு ரூ. 3 ஆயிரத்து 500 கட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை அரசு விரைவு தபால் மூலம் பாா்சல் வந்துள்ளது. தங்க நகை வந்துவிட்டது என ஆசை ஆசையாய் பாா்சலைப் பிரித்த டேவிட்டுக்கு அதிா்ச்சி காத்திருந்தது. அந்தப் பாா்சலுக்குள் பேன்சி கடையில் விற்கும் பாசியை நெக்லஸ் போன்று வடிவமைத்து அனுப்பியுள்ளனா்.

இதையடுத்து, டேவிட் துவாக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில், இதேபோன்று அதே பகுதியை சோ்ந்த மேலும் நான்கு பேரிடம் இந்த மோசடி கும்பல் கைவரிசையைக் காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT