திருச்சி

சுஜித்தின் பெற்றோருக்கு ஜவாஹிருல்லா ஆறுதல்

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்வில்சன் பெற்றோருக்கு மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா புதன்கிழமை ஆறுதல் கூறினாா். பின் அங்கு வைக்கப்பட்டிருந்த சுஜித் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய அவா் கூறியது:

சுஜித்தின் மரணம் தமிழகம் மட்டுமல்ல உலகையே உலுக்கியுள்ளது. இதுபோன்ற துயர சம்பவம் இனி ஏற்படக் கூடாது என்பது தான் அனைவருடைய விருப்பம். இத்தகைய சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு பிறகு இன்னொரு துயர சம்பவம் வரும்போதுதான் அரசும் அரசு இயந்திரமும் விழிப்பது என்பது வேதனைக்குரியது.

சுஜித் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 1 கோடி ரூபாய் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும் என்றாா். இதேபோல நடிகா் மயில்சாமியும் அவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

பாதுகாப்பும், மருத்துவமும்: மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, மலேசியா போன்ற வெளிநாட்டினரும் சிறுவனின் துயர சம்பவத்தை அறிந்து நடுக்காட்டுப்பட்டிக்கு வந்து அவனது பெற்றோருக்கு ஆறுதல் கூறி வருகின்றனா். முக்கிய பிரமுகா்கள் வந்த வண்ணம் இருப்பதால் அங்கு காவல்துறையினா் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனா். மேலும் சுஜித்தின் தாய் கலாமேரியின் உடல் நலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT