திருச்சி

மொஹரம்: மதநல்லிணக்க விழாவாக கொண்டாட்டம்

DIN

திருச்சியில் மொஹரம் பண்டிகையை மதநல்லிணக்க விழாவாக இஸ்லாமியர்கள் புதன்கிழமை கொண்டாடினர்.
திருச்சி பாலக்கரை பகுதியில் பழைமை வாய்ந்த ஷமிமுல்லாஷா பள்ளிவாசல் உள்ளது. இங்கு ஆண்டுதோரும் மொஹரம் பண்டிகையை மதநல்லிணக்க விழாவாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, நிகழாண்டும் தேசிய தர்காக்கள் பேரவை, மொஹரம் விழா கமிட்டி சார்பில் மத நல்லிணக்க விழாவாக செவ்வாய்க்கிழமை இரவு அலாவா எனும் தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இஸ்லாமியர்கள் பலரும் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். 
மேலும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மூன்று மதத்தினர், அரசியல் கட்சியினர், தர்கா பேரவையினர் என பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT