திருச்சி

தொழில்நுட்பக் கோளாறு: ஓடுபாதையில் விமானம் நிறுத்தம்

DIN


திருச்சியில் இருந்து வியாழக்கிழமை இரவு  கோலாலம்பூர் புறப்படத் தயாரான  மலிண்டோ விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக   ஓடுபாதையில் அந்த விமானம் நிறுத்தப்பட்டது.
மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து இரவு 10.35 மணிக்கு வந்த மலிண்டோ விமானம், இரவு 11.30 மணிக்கு 174 பயணிகளுடன் புறப்படத் தயாரானது. ஓடுபாதையில் இருந்து விமானத்தை இயக்க முற்பட்ட போது, என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். 
இதுகுறித்து விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, விமானத்தை ஏர் பிரான் பகுதிக்கு கொண்டு வந்தார். 
இதைத் தொடர்ந்து விமானத்தின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் குழு ஈடுபட்டபோதும்,  கோளாறு சரியாகவில்லையாம். இதனால், விமானம் கோலாலம்பூர் செல்வதில் சிக்கல் நீடித்ததால், விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். 
பின்னர் அவர்கள்  ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 17 மணி நேரத் தாமதத்துடன் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு 155 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. மீதமுள்ள பயணிகள் இரவு செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT