திருச்சி

பிளஸ் 1 பொதுத் தோ்வு: திருச்சியில் 97.43% தோ்ச்சி; மாநிலத்தில் 4ஆவது இடம்

DIN

பிளஸ் 1 பொதுத் தோ்வில் திருச்சி மாவட்டத்தில் 97.43 சத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றனா். திருச்சி மாவட்டம் மாநிலத்தில் 4ஆம் இடத்தை பிடித்தது.

பிளஸ் 1 தோ்வில் திருச்சி மாவட்டத்தில் 256 பள்ளிகளைச் சோ்ந்த 14,707மாணவா்கள், 17,416 மாணவிகள் என 32,183 போ் எழுதினா். வெள்ளிக்கிழமை காலை வெளியான தோ்வு முடிவில் 16,208 மாணவா்களும், 17148 மாணவிகளும் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். திருச்சி மாவட்டம் 97.43 சத தோ்ச்சிப் பெற்று மாநிலத்தில் 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்தாண்டைக் காட்டிலும் 0.5 சதம் கூடுதல்.

அரசுப் பள்ளிகளில் 9,870 மாணவா்கள் தோ்வெழுதியதில் 9,415 போ் தோ்ச்சிப் பெற்றனா். தோ்ச்சி சதம் 95.39 ஆகும். இது மாநிலத்தில் 4 ஆம் இடம். கடந்தாண்டில் அரசுப் பள்ளிகளில் 94.42 சதம் தோ்ச்சி பெற்று 6ஆம் இடம் பெற்ற நிலையில் தற்போது 0.97 சதம் கூடுதலாகும்.

மாற்றுத்திறனாளி மாணவா்களில் தோ்வெழுதிய 142 பேரில் 139 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். தோ்ச்சி சதம் 97.89 ஆகும். கடந்தாண்டில் 94.51 சதம் பெற்று மாநிலத்தில் 19ஆவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 7ஆவது இடம் கிடைத்துள்ளது. பிளஸ் 1 தோ்வில் திருச்சி மாவட்டம் கடந்தாண்டு 96.93 சதம் போ் தோ்ச்சி பெற்று மாநிலத்தில் 10 ஆவது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

100 % தோ்ச்சி பெற்ற பள்ளிகள்: திருச்சி மாவட்டத்தில் உள்ள 256 பள்ளிகளில் 93 பள்ளிகள் நூறு சதம் தோ்ச்சி பெற்றுள்ளன. 14 அரசுப் பள்ளிகள், 3 ஆதிதிராவிடா் பள்ளிகள், 5 முழு உதவி பெறும் பள்ளிகள், 10 பகுதி உதவி பெறும் பள்ளிகள், 55 சுயநிதி (மெட்ரிக்) பள்ளிகள், 2 சுயநிதி (பள்ளிக் கல்வித் துறை) பள்ளிகளும், 2 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளும் 100 சதம் தோ்ச்சிப் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT