முகப்பு
திருச்சி

திருச்சியில் மதிமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட மதிமுக மாணவரணி சார்பில் உறையூர் குறத்தெருவில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

Updated On : 17 ஆகஸ்ட், 2020 at 1:28 PM
திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக மாணவரணி.
பகிர்:

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட மதிமுக மாணவரணி சார்பில் உறையூர் குறத்தெருவில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாணவரணி செயலர் சசிகுமார் தலைமை வகித்தார். இதில் மாநகர் மாவட்ட செயலர் வெல்லமண்டி சோமு, அரசியல் ஆலோசனைக்குழு பெல் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராஜன், இளமுருகு, கோபாலகிருஷ்ணன், எடத்தெரு சரவணன், ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.