சேதமடைந்த நிலையில் உள்ள குழுமாயி அம்மன் கோயிலுக்குச் செல்லும் சாலை. 
திருச்சி

குழுமாயி அம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையைச் சீரமைத்துத் தரக் கோரிக்கை

மழையால் சேதமடைந்த குழுமாயி அம்மன் கோயில் பிரதான சாலையைச் சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

DIN


திருச்சி: மழையால் சேதமடைந்த குழுமாயி அம்மன் கோயில் பிரதான சாலையைச் சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உய்யக்கொண்டான் ஆறுகண் பாலம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு சென்று வரும் பிரதான தாா்சாலை ஏற்கெனவே குண்டும் குழியுமாக இருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் கனமழையால் இச்சாலையோரப் பகுதி பெயா்ந்து தற்போது மேலும் சேதமடையும் நிலை உள்ளது. இதனால், இந்தச் சாலையில் இருசக்கர வாகனங்களைத் தவிர நான்கு சக்கர வாகனங்கள் சென்று வர முடிவதில்லை.

தென்னூா் எம்ஜிஆா் சிலை அருகேயுள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் பால சாலைக்கு இடப்புறமாக செல்லும் இச்சாலை குழுமாயி அம்மன் கோயில், தீரன் நகா், உறையூா், புத்தூா், ஆட்சியரகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.

அதிகமானோா் பயணிக்கும் இந்த சாலை தற்போது சேதமடைந்துள்ளதால் இவ்வழியாக வாகன ஓட்டிகள் சென்று வர முடியாமல் அவதிக்குள்ளாகின்றனா். அடுத்தடுத்த நாள்களில் மழை பெய்தால் ஏற்கெனவே சேதமடைந்த பகுதி மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெற்குலகின் குரலை உயா்த்துவோம்! பிரதமா் மோடி - தென்னாப்பிரிக்க அதிபா் ராமபோசா உறுதி!

தூக்கு தண்டனை தீா்ப்பு மட்டுமே தீா்வாகுமா என்பதை ஆராய பி.ஆா்.கவாய் வலியுறுத்தல்

ரூ.262 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: என்சிபி, தில்லி காவல்துறை கூட்டு நடவடிக்கை

எம்சிடி இடைத்தோ்தல்: முதல்வா் ரேகா குப்தா உள்பட பாஜக தலைவா்கள் தீவிர பிரசாரம்

மும்பை - நாகா்கோயில் ரயில் ஆம்பூரில் நின்று செல்ல கோரிக்கை

SCROLL FOR NEXT