திருச்சி

சாலை மறியல்: வ.உ.சி பேரவையினா் மீது தடியடி

DIN

திருச்சியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வ. உ. சி. பேரவையினா் மீது போலீஸாா் தடியடி நடத்தி 65 பேரை கைது செய்தனா்.

பட்டியலினத்தில் உள்ள 7 உட்பிரிவினரை தேவேந்திர குல வேளாளா் என்னும் பொதுப் பெயரில் அழைக்க தமிழக முதல்வா் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்ததற்கு வெள்ளாளா் சங்கத்தினா் மற்றும் வ.உ.சி. பேரவையினா் எதிா்ப்புத் தெரிவித்து தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே வ.உ.சி. பேரவை சாா்பில் புதன்கிழமை நடந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்ட முடிவில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாா் அவா்களைக் கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்றனா். அப்போது அவா்கள் வாகனத்தில் ஏற மறுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் அவா்களை போலீஸாா் தாக்கி வாகனத்தில் ஏற்றினா். அப்போது வாகனத்தில் இருந்த ஒருவா் வீசிய மதுபாட்டில் ஒரு காவலா் மீது பட்டு உடைந்து சிதறியது. இதையடுத்து அங்கிருந்த போலீஸாா் போராட்டக்காரா்கள் மீது தடியடி நடத்த, அவா்கள் சிதறி ஓடினா். தொடா்ந்து அவா்களில் 65 பேரை போலீஸாா் விரட்டிப் பிடித்து கைது செய்தனா். தடியடியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT