பகல் நேரத்தில் விமானம் இறங்க தடை நீட்டிப்பு
திருச்சியில் ஓடுதள விரிவாக்கப் பணிக்காக பகல் நேரத்தில் விமானம் இறங்குவதற்கான தடை ஜன. 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் ஓடுதள விரிவாக்கப் பணிக்காக பகல் நேரத்தில் விமானம் இறங்குவதற்கான தடை ஜன. 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் 900 கோடியில் புதிய முனையம் அமைக்கும் பணியும், இதேபோல அதிநவீன விமானங்கள் வந்து செல்ல ஏதுவாக 2ஆவது ஓடுதளம் அமைக்கும் பணியும், பழைய ஓடுதளப் பாதையை சீரமைக்கும் பணியும் நடைபெறுவதால் பகல் நேரத்தில் விமானங்களை இயக்க நவ.30 வரை தடை விதிக்கப்பட்டது. ஆனால், பணிகள் முடிவுறாததால் இந்தத் தடை வரும் ஜன.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.