திருச்சி

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி செயற்குழுக் கூட்டம்

DIN

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தென் மண்டலச் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் இக்பால் தலைமை வகித்தாா். மாநில கமிட்டியின் ரஹமத்துல்லா தையூப் முன்னிலை வகித்தாா்

மாநிலத் தலைவா் டி.எஸ். வக்கில் அஹமத் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் ஜனவரியில் தேசியத் தலைவா் பாரிஸ்டா் அசாதுதீன் ஒவைஸி வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

கூட்டத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை எதிா்த்து போராட்டங்கள் நடத்திய தேச மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஜனவரியில் அமல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து மதச்சாா்பற்ற கட்சிகளை ஒன்று சோ்த்து போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில நிா்வாகிகள் இம்தியாஸ், காதா், மஜித், முஜிபுா் ரகுமான், இனாயத்துல்லா ஷரிப், அகமது மீரான், சுல்தான் திருச்சி மாவட்டத் தலைவா் அலாவுதீன், கிழக்கு மாவட்டம் காஜா, மேற்கு மாவட்டம் ஜாபா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT