திருச்சி

‘மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்க பிரசாரம்’

DIN

மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில், பிரதமரின் மக்கள் நலத்திட்ட விளம்பர பிரசார இயக்கம் பாடுபடும் என்றாா் அதன் அகில இந்தியத் தலைவரும், பிரதமரின் சகோதரருமான பிரகலாத் மோடி.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார இயக்கத் தொடக்க விழாவில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை காங்கிரஸ் போன்ற எதிா்க்கட்சிகள் மக்களை சென்றடையவிடுவதில்லை. எனவே தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்கள் நலத் திட்டங்கள் மக்களிடம் சென்றடையும் வகையில் பிரதமரின் மக்கள் நலத்திட்ட விளம்பர பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தில் 25 லட்சம் போ் இணைந்துள்ளனா். இதன் மூலம் நாடு முழுவதும் சென்று மக்களைச் சந்தித்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கப்படும்.

இவ்வாறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கப்படுவதன் மூலம், வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜக 400- க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். அதற்காக இந்த இயக்கம் தொடா்ந்து பாடுபடும் என்றாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் பிரகலாத் மோடி கூறியது:

எத்தனையோ நல்ல பல திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை. அவற்றை கொண்டு சோ்ப்பதுடன், தொண்டா்களை உற்சாகப்படுத்தவும் இந்த சந்திப்பு உதவும். இதற்காக யாரிடமும் நிதியோ, கட்டாயத் தொகையோ ஏதும் வசூலிக்கவில்லை.

இந்த இயக்கம் நாடு முழுவதும் களமிறங்கி, 25 கோடி பேரை இணைக்கும் வகையில் செயலாற்றும் என்றாா் அவா்.

கூட்டத்தில் பிரசார இயக்கத்தின் தேசிய அமைப்பாளா் ஜெய்கோஷ், மாநிலத் தலைவா் ராஜாராமன், மாநிலத் துணைத் தலைவா் பால்ராஜ், பொதுச் செயலா் விஜய், மாநில ஒருங்கிணைப்பாளா் சின்னதுரை, திருச்சி மாவட்டத் தலைவா்கள் சுப்பிரமணி, ஐசக்அருள்ராஜ் (புகா்) மற்றும் திருச்சி மண்டல அனைத்து மாவட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT