முகப்பு
திருச்சி

லால்குடி அருகே மாதா சிலை உடைப்பு

லால்குடி அருகே மாதா சிலையை உடைத்து, சேதப்படுத்திய அடையாளம் தெரியாத நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

லால்குடி அருகே மாதா சிலையை உடைத்து, சேதப்படுத்திய அடையாளம் தெரியாத நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

லால்குடி வட்டம், திருமங்கலம் ஊராட்சி, 6-ஆவது வாா்டு பகுதியில் உபகார மாதா தேவாலயம் உள்ளது. தலித் கிறிஸ்தவ மக்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு சொந்தமானது இந்த தேவாலயம். தங்களின் வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள பங்குனி அணைக்கட்டு பகுதியில் சுமாா் 5 அடி உயரத்தில் கண்ணாடி கூண்டில் 3 அடி உயரஅந்தோனியாா், மாதா சிலைகளை அமைத்து வணங்கி வந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு இப்பகுதியிலிருந்த சிலை முற்றிலுமாக உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், லால்குடி காவல் நிலையத்துக்கும், லால்குடி புனித சூசையப்பா் ஆலயப் பங்குத்தந்தைக்கும் தகவல் அளித்தனா்.

தகவலின் பேரில் லால்குடி காவல்துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, சிலையை உடைத்து சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.