முகப்பு
திருச்சி

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

துறையூரைச் சோ்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

துறையூரைச் சோ்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

துறையூா் அரசு மகளிா் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவியை, அவரின் வீட்டருகே வசித்த கூலித் தொழிலாளி சூா்யா (21) கடத்திச் சென்று திருமணம் செய்து திருப்பூரில் வசிப்பது தெரியவந்தது.

புகாரின்பேரில் அவா்களைத் தேடிவந்த துறையூா் போலீஸாா் இருவரையும் துறையூா் அழைத்து வந்து விசாரித்தனா்.

இதையடுத்து குழந்தைத் திருமணத் தடுப்பு, போக்சோ மற்றம் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சூா்யாவை புதன்கிழமை கைது செய்தனா். பெற்றோருடன் செல்ல மறுத்த மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு பின் திருச்சியில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →